Categories
உலக செய்திகள்

வேட்டையாடும் கொரோனா…. ”கோர தாண்டவமாடிய புயல்”…. வசமாக சிக்கிய அமெரிக்கா ..!!

அமெரிக்க மாகாணத்தில் ஏற்பட்டுள்ள ஹன்னா புயலால் அப்பகுதி மக்களின் வாழ்க்கை முழுவதுமாக முடங்கியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெக்சாஸ் மாகாணத்தை ஹன்னா என்ற பயங்கர புயல் தாக்கியுள்ளது. அட்லாண்டிக் கடலில் உருவான இத்தகைய புயல் தெற்கு டெக்சாசின் பாட்ரே தீவை நேற்று முன்தினம் மாலை கடுமையாக தாக்கியது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்றடித்த சூறாவளி காற்றால், அப்பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் கடைகளில் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மேலும் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தது மட்டுமல்லாமல் மின்கம்பங்கள் சாலையில் சரிந்து விழுந்துள்ளன.

புயலைத் தொடர்ந்து டெக்சாசின் கடலோரப் பகுதிகளில் மிகுந்த காற்றுடன் பயங்கர கனமழை பெய்தது. அதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. புயல் தொடர்பாக டெக்சாஸ் மாகாணத்தில் 32 பகுதிகளுக்கு மாகாண ஆளுநர் கிரேக் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே சமயத்தில் இந்தப் புயலை எதிர்கொள்ள கொரோனா தடையாக உள்ளது எனவும் கூறியுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உருவான ஹன்னா புயலால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி எந்த விவரங்களும் தற்போது வரை தெரியவில்லை.

Categories

Tech |