பறவைகளை வேடிக்கை பார்க்க சென்ற நபர் பெரும்புதையலுக்கு சொந்தக்காரரான சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த 50 வயது நபர் ஒருவருக்கு மெட்டல் டிடெக்டர் மூலமாக பூமியின் அடியில் கிடைக்கும் உலோகப்பொருட்களை எடுப்பது வழக்கமாம். மேலும் இவருக்கு பறவைகள் மீதும் பிரியமாம். இந்நிலையில் பறவைகள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த வயல் ஒன்றில் பொருள் ஒன்று பளிச்சிட்டு கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.
மேலும் அவர் ஏற்கனவே உலோகப்பொருட்களை எடுத்துள்ளவர் என்பதால் அதிலிருப்பது தங்க நாணயம் என்பதை கண்டுபிடித்துவிட்டார். இதைத் தொடர்ந்து உடனடியாக வீட்டிற்குச் சென்ற அவர் மெட்டல் டிடெக்டர், பெரிய பைகள் இரண்டு மற்றும் மண்வெட்டி போன்றவற்றை எடுத்து வந்து மண்ணை அகற்றி பார்த்திருக்கிறார். அப்போது ஏதோ வளையல் போன்று ஒன்று இருந்துள்ளது. அதனை எடுத்துப் பார்த்த பின்பு தான் அது ஒரு பெரிய பானை என்று தெரிந்துள்ளது. மேலும் பானை முழுவதும் 1300 தங்க நாணயங்கள் இருந்துள்ளது.
அதைக் கண்டவர் அதிர்ச்சியில் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து விட்டாராம். மேலும் இந்த நாணயங்கள் கிபி 40 ஆம் காலத்தில் வாழ்ந்த புரட்சிப்பெண் Bouticca என்பவருக்கு சொந்தமானவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் இதில் உள்ள ஒரு நாணயத்தின் மதிப்பு 650 பவுண்டுகள் ஆகும். மேலும் இந்த அனைத்து நாணயங்களின் மொத்த மதிப்பு 8 லட்சம் பவுண்டுகள் ஆகும். இதற்கிடையில் அந்த நபர் அவரின் பெயரை வெளியிட மறுத்துள்ளார். மேலும் அவர் பாதுகாப்பை கருதியே பெயரை கூறவில்லை என்று கருதப்படுகிறது. இந்திய மதிப்புக்கு ரூ.7 கோடியே 97 லட்சத்து 39 ஆயிரத்து 864 என்பது குறிப்பிடத்தக்கது.