ஆற்றில் வெள்ளம் செல்வதை வேடிக்கை பார்க்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என்று சென்னை காவல் ஆணையர் அறிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஆறுகள் அனைத்திலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. இந்த ஆறுகளை வேடிக்கை பார்ப்பதற்காக பாலங்களும், கரைகளிலும் மக்கள் கூடி வருகின்றனர். அதில் வேடிக்கை பார்க்க வரும் இளைஞர்கள் செல்பி எடுத்துக் கொள்கின்றன. இதனால் ஆற்றில் தவறி விழுந்து உயிர் இழக்கும் அபாயம் ஏற்படுகின்றது.
இதனால் பொதுமக்கள் முடிந்தவரை வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருக்கும்படி சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார். தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். கூவம் ஆற்றங்கரையோரம், மெரினா உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் தேங்கி இருக்கும் வெள்ள நீரை வேடிக்கை பார்ப்பதற்காக செல்ல வேண்டாம். முக்கியமாக குழந்தைகள் சென்று விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.