தென்காசியில் முக கவசம் அணியாமல் வெளியில் வந்த பத்து பேரிடம் ரூபாய் 200 அபராதம் விதித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த வருடம் முழுவதும் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க பேரூராட்சி செயல் அலுவலர் அரசப்பன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் நவராஜ், சுகாதார மேற்பார்வையாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர் முனியசாமி, கிராம நிர்வாக உதவியாளர் அழகுராஜா மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் அவ்வழியாக 10 பேர் முக கவசம் அணியாமல் வந்து கொண்டிருந்தார்கள். இவர்களிடம் அதிகாரிகள் ரூ. 200 அபராதம் விதித்து வசூலித்து உள்ளனர். மேலும் இவ்வாறு முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவிர்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.