குஜராத் மாநிலத்தில் லாரி ஏறியதில் சாலையோர படுத்து தூங்கி அப்பாவி தொழிலாளர்கள் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் சூரத் அருகே உள்ள கோசம்ப என்ற இடத்தில் சாலையோரம் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த லாரி நிலைதடுமாறி தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொடூர சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.