Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்து மோதிய லாரி…. நொடியில் நடந்த கோர சம்பவம்…. கோவையில் பரபரப்பு…!!

லாரி மோதி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை தங்கவேல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதில் கோபால ராஜ் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் தென்திருப்பதி ரோட்டிலிருந்து ஆலாங்கொம்பு சாலைக்கு வந்த லாரி எதிர்பாராதவிதமாக பேருந்தின் மீது பயங்கரமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் அரசு பேருந்து கவிழ்ந்துவிட்டது. இதனை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த தங்கவேல், கோபால் ராஜ், சீனிவாசன், விஜயலட்சுமி உட்பட 8 பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் தென்திருப்பதி சாலையில் இருந்து வந்த லாரி ஓட்டுனர் சிறுமுகை ரோட்டில் வந்த அரசு பேருந்தை கவனிக்காததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

Categories

Tech |