Categories
மாநில செய்திகள்

“வேகமாக பரவும் காய்ச்சல்” கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம்…. அரசு பள்ளிகளில் திடீர் நடவடிக்கை….!!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலின் தாக்கம் தற்போது கடலூர் மாவட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடலூர் மட்டுமின்றி கடலூரை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும்  காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சோர்வு, உடம்பில் வலி, சளி மற்றும் இருமல் போன்ற உபாதைகள் ஏற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள். இதனையடுத்து தற்போது காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மாவட்டம் முழுதும் புகை மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதோடு அரசு பள்ளிகளிலும் மாணவர்களை வகுப்பிலிருந்து வெளியேற்றிவிட்டு புகை‌ அடிக்கும் பணி நடைபெறுகிறது. மேலும் வைரஸ் காய்ச்சலின் தாக்கம் குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அளவில் பரவுவதால் தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Categories

Tech |