Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெள்ளை மாதுளை சாப்பிட்டால் இத்தனை பிரச்சனை சரியாகுமா..? இது தெரியாம போச்சே..!!

புனிகா கிரனாட்டம் (Punica granatum) என்ற தாவரவியல் பெயரால் அறியப்படும், வெள்ளை மாதுளை அருமருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வெள்ளை மாதுளையில் ஃபோலிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உயிரணு வளர்ச்சி மற்றும் ரத்த ஒட்டத்தின் அளவை அதிகரிக்கவும் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

போதிய இரத்த ஓட்டத்தை அளித்து குழந்தைக்கு ஏற்படும் மூளை பாதிப்பைத் தடுக்கிறது. மேலும், நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் வல்லமை படைத்தது.

மாதுளையில் விட்டமின் சி, இ, கே, பி1, பி2, பி3, பி5, பி6 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

இப்பழத்தில் தாது உப்புக்களான மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியன உள்ளன.

இதன் காரணமாக, இரத்த சோகை, இதயநோய்கள், கீல்வாதம், மனஅழுத்தம் உள்ளிட்டவற்றில் இருந்து நம்மை காக்கிறது.

Categories

Tech |