தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பான வெள்ளை அறிக்கை பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் க்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். திமுக ஆட்சியில் தினமும்1,67,27 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகின்றது. ஆனால் அதிமுக ஆட்சியில் தடுப்பூசி போடுவதற்கு கவனம் செலுத்தவில்லை. தினமும் 61,441 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதாக விமர்சனம் செய்துள்ளார்.