லண்டனில் வெள்ளையின தம்பதிகளுக்கு பிறந்த கறுப்பின குழந்தையை தந்தை மிகுந்த அன்புடன் வளர்த்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனைச் சேர்ந்த Jim Lawton மற்றும் Collette என்ற தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை தன் சிறிதும் தன் பெற்றோரைபோல் இல்லாமல் கருப்பின குழந்தை போல் இருந்துள்ளது. எனினும் Jim தன் குழந்தையை அள்ளி அணைத்து கொண்டதோடு குழந்தை மீது பேரன்பு கொண்டிருந்தார். மேலும் குழந்தைக்கு Jeorgina Lawton என்று பெரியரிட்டு செல்லமாக ஜினா என்று அழைத்துவந்துள்ளனர். ஆனால் சமுதாயம் ஜினாவை சிறு வயது முதலே கேள்விகளால் துளைத்து வந்தது.
எனினும் தன் பெற்றோரின் மிகுந்த அரவணைப்பில் வளர்ந்து வந்ததால் அவர் எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் ஜினாவின் தந்தையான Jim தன் 55 வயதில் புற்றுநோயால் காலமானார். ஜினா அதனை தன் வாழ்க்கையின் மிகப்பெரிய துக்க நாளாக எண்ணி மிகுந்த வேதனை அடைந்தார். இந்நிலையில் இறப்பதற்கு முன்பு தன் மகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய Jim சம்மதம் கூறினார்.
ஆனால் ஜினா தன் தந்தை உயிருடன் இருக்கும் போதே அவ்வாறு பரிசோதனை செய்வது அவரின் அன்பை அவமதிப்பதாக இருக்கும் என்று அதை செய்ய மறுத்துள்ளார். ஆனால் தந்தை இறந்த பின்பு ஜினா டிஎன்ஏ பரிசோதனை செய்துள்ளார். அதன் முடிவுகள் அவரை நிலைகுலையச் செய்துள்ளது. அதாவது ஜினாவின் தந்தை Jim அல்ல. இதை அறிந்ததும் ஜினா கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
தன் தாய் மீது கோபம் அடைந்த அவர் உண்மையை கூறுமாறு கேட்டுள்ளார். முதலில் மறுத்த அவர் பின்பு நடந்தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது ஒரு நாள் இரவில் மதுபான விடுதிக்கு சென்று கருப்பின மனிதர் ஒருவரை சந்தித்ததாகவும் அதன் பின்பு நடந்தது எதுவும் தனக்கு ஞாபகம் இல்லை என்று குற்ற உணர்வுடன் தெரிவித்துள்ளார். இதனால் ஜினா மிகுந்த கோபம் அடைந்தார். எனினும் தன் பெற்றோர்கள் வெள்ளை இனத்தவர்கள் தான் என்று தெளிவாக தெரியும் போது தான் கருப்பினத்தவள் என்பதை மீறி தன் தந்தை தன் மீது எப்படி அளவு கடந்த அன்பை கொண்டிருந்தார்.
மட்டுமன்றி தன் தாயையும் அதிகமாக நேசித்தார் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. மேலும் தன் தந்தை இறப்பதற்கு முன்பு உறவினர்களிடம் நிறம் குறித்து தன் மகளிடம் எதுவும் கேட்கக்கூடாது என்று கட்டளையிட்டிருப்பதை அறிந்த ஜினாவிற்கு தன் தந்தை மீது கொண்ட அன்பு மேலும் பல மடங்கானது. இதனால் தற்போது வரை தன் உண்மையான தந்தையை அறிந்து கொள்ள அவர் விரும்பவில்லை. ஏனெனில் தன் அப்பா ஜிம் தான் என்று நம்பும் அவரின் எண்ணம் துளியும் குறையக் கூடாது என்று எண்ணுவதாக கூறியுள்ளார்.