அரசு வேலை வழங்கப்படும் என்று மு க ஸ்டாலின் உறுதி அளித்ததாக வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தெரிவித்துள்ளார்..
பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினார்.. அப்போது தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த மாரியப்பனை வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்.. இந்த சந்திப்பின் போது, பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். அதன்பின்னர் மாரியப்பன் செய்தியாளர்களை சந்தித்தார்..
அப்போது அவர் பேசியதாவது, பிற விளையாட்டு வீரர்களுக்கு தரும் முக்கியத்துவம் போல், மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம். நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.. நிச்சயம் அடுத்த முறை தங்கம் வெல்வேன்.. குரூப் 1 அரசு பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதி அளித்தார் என்று தெரிவித்துள்ளார்..
முன்னதாக வெள்ளி வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாரியப்பனுக்கு 2 கோடி ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது..