Categories
மாநில செய்திகள்

வெள்ளம் ரொம்ப வந்துடுச்சா…! நடந்தே சென்று பார்வையிட்ட முதல்வர்…. மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் ..!!

உபரி நீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளம் சூழ்ந்த மணலி மற்றும் புறநகர் பகுதிகளை நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

பருவமழை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உபரி நீர் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து இன்று காலை சுமார் 30 ஆயிரம் கன அடி நீர் பூண்டி ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்டது. இந்த நீர் கொசஸ்தலை ஆறு வழியாக பாய்ந்து மணலி, புதுநகர் மற்றும் சடயங்குப்பம் பகுதிக்குட்பட்ட ஜெனிஃபர் நகர், மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளை வெள்ளம்போல் சூழ்ந்தது.

இதனால் இந்த பகுதிகளில் வசித்து வந்த மக்கள் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியதோடு அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது முதலமைச்சருடன் அமைச்சர் கே.என்.நேரு, பி.கே.சேகர், மாதவரம் சுதர்சனம், கே.பி சங்கர் மற்றும் சென்னை மாநகர மேயர் சந்திப் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.

Categories

Tech |