தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 3 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மழை வெள்ள பாதிப்புகளை சென்னை பெரிதும் சந்தித்து வருகிறது. அதனால் சென்னை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள குறிப்பிட்ட அளவிலான நிதி ஒதுக்கப்படும். அவ்வாறு ஒதுக்கப்பட்ட ஆளும் அது மக்களைச் சென்றடைகிறதா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் சென்னையின் வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து தமிழ்நாடு பட்ஜெட்டில் மட்டும் ரூ.6,744.01 போடி மதிப்பீட்டிற்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தப் பணிகள் நடைபெற்றதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என்று பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் சுந்தர்ராஜன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு கடந்த கால ஆட்சியர்கள் பதில் அளிப்பார்களா என்பது கேள்வியாக உள்ளது.