ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சேர்ந்தனூர் கிராமத்தில் பரந்தாமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வினிதா தனது உறவினர்களான அபிநயா, ரோஷினி, ரித்திகா, தமிழரசி ஆகியோருடன் அப்பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 5 பேரையும் வெள்ளம் அடித்து சென்றுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வினிதா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மற்ற நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.