Categories
மாநில செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்…. விஜயகாந்த் வேண்டுகோள்….!!!!

மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிகவினர் உதவி செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தொடர் மழையால் பல பகுதிகளில் அணைகள், ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோரம் வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்தி, அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

மேலும் அவர்களுக்கு தேவையான உணவு மருத்துவம் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் காலரா போன்ற பிற நோய்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.அதனால் நோய் பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

இதையடுத்து கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேமுதிக தொண்டர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நிவாரணப் பணிகளை செய்ய வேண்டும். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |