மின்னல் தாக்கி உயிரிழந்த மாடு மற்றும் கன்றுக்குட்டிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள வேங்கை நகரில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான பசுமாடுகளை வீட்டின் பின் புறத்தில் அமைந்துள்ள ஒரு மரத்தில் கட்டி இருந்தார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் திடீரென இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்துள்ளது. அப்போது பெருமாள் மரத்தில் கட்டி இருந்த 1 மாடு மற்றும் கன்றுக்குட்டியை மின்னல் தாக்கியது. இதில் படுகாயமடைந்த இரண்டும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாள் பாலமூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரி ராமதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். மேலும் உயிரிழந்த மாடு மற்றும் கன்றுக்குட்டிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.