Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. முற்றிலும் இடிந்து விழுந்த வீடு…. நிரம்பி வழியும் தடுப்பணைகள்….!!!

ஆட்கள் குடியிருக்காத வீடு திடீரென இடிந்து விழுந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் குமரன் வீதியில் ஆட்கள் குடியிருக்காமல் இருந்த வீடு கனமழைக்கு தாக்குபிடிக்காமல் முற்றிலும் இடிந்து விழுந்தது. மேலும் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் சிறிய தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதனால விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |