Categories
தேசிய செய்திகள்

வெளில சொன்னா கொன்ருவேன்..! “10 வயது மாணவியை சீரழித்த காமுக ஆசிரியர்”…. அதிரவைக்கும் சம்பவம்.!!

கர்நாடகாவில் 10 வயது மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்செயர்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் குறிப்பாக பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய சில ஆசிரியர்களே இது போன்ற ஒரு பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது தான் வேதனையின் உச்சமாக இருக்கிறது. இது போன்ற சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி புறநகர் பகுதியில் இருக்கிறது ஒரு அரசுப் பள்ளி..

இப்பள்ளியில் அந்தப் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதேசமயம் இந்த பள்ளியில் உருது ஆசிரியராக பணிபுரிந்து வரும் அக்பர் அந்த சிறுமிக்கு அவ்வப்போது பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளான்.. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பள்ளியில் அந்த சிறுமியை ஒரு தனி அறைக்கு அழைத்து சென்ற அந்த கொடூர ஆசிரியர் வலுக்கட்டாயமாக கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்..

மேலும் நடந்ததை வெளியில் யாரிடமாவது சொன்னால் நான் உன்னை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டி அனுப்பி இருக்கிறான்.. இருப்பினும் தனக்கு நேர்ந்த துயரத்தை அந்த மாணவி தன்னுடைய பெற்றோரிடம் கூறி கதறி அழுது இருக்கிறாள்.. இதனைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர் பத்ராவதி புறநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.. இந்த புகாரின் பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அக்பரை கைது செய்துள்ளனர்..

இதற்கிடையே அந்த மாணவிக்கு பத்ராவதி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது இதில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதனை தொடர்ந்து போலீசார் அக்பரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.. பள்ளியில் மாணவிகளுக்கு பாடம் நடத்தக்கூடிய ஆசிரியரே இப்படி மாணவியை வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |