Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வெளிய தலகாட்ட முடியல…. கோடை காலம் வந்துட்டு…. ராணிப்பேட்டையில் பொதுமக்கள் அவதி….!!

ராணிப்பேட்டையில் கோடை காலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மதிய வேளையில் அனல் காற்று வீசுவதால், வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

மேலும் சோளிங்கரில் மூத்த குடிமக்கள், சிறுவர்கள் உட்பட அனைவரும் வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டிலேயே முடங்கியதால் வெளியே ஆள் நடமாட்டமே இல்லாமல் காணப்பட்டது. இதனையடுத்து பள்ளி சிறுவர்கள் உடல் உஷ்ணத்தை குறைத்துக்கொள்ள அப்பகுதியிலிருக்கும் குளத்தில் நீராடி மகிழ்ந்தனர்.

Categories

Tech |