Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற மாணவன்…. குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கிணற்றில் விழுந்து 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள ஈச்சவாரி கிழக்கு வீதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகன் அரவிந்த் வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அரவிந்த் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அரவிந்தை தேடியுள்ளனர்.

அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அரவிந்தன் பிணமாக மிதந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் எருமப்பட்டி போலீசார் கிணற்றில் இறங்கி அரவிந்தனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |