Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற நண்பர்கள்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி நகர் பகுதியில் கூலி தொழிலாளியான அந்தோணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சுரேஷ், முருகன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் நாங்குநேரிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் பொன்னாக்குடி வெள்ளநீர் கால்வாய் அருகில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்தோணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதனை அடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுரேஷ் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தோணியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |