இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன் படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியாகியது. இதில் 17.78 லட்சம் மாணவனைகள் எழுதிய நிலையில் 9.3 லட்சம் பேர் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வு வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து தமிழக ராஜ்பவன் தனது ட்விட்டர் பக்கத்தில் நீட் தேர்வில் பல பெரிய மாநிலங்களை பின்னுக்கு தள்ளிய வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார். அதனைபோல நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கி உள்ளார். நீட் தேர்வில் வெற்றி பெறாத தேர்வாளர்கள் தற்காலிக பின்னடைவை மேம்பட்ட உத்திகள், வலுவான உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால் போராடி வெற்றி பெற வேண்டும் என்றும் மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.