சிவகார்த்திகேயன் மகன் குகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என தனக்குள் பன்முக திறமைகளை கொண்டுள்ளார். இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் அண்மையில் வெளியான டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் மீண்டும் அவரை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.
இவர் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இவருக்கு ஆர்த்தி என்கின்ற மனைவியும் ஆராதனா என்ற மகளும் குகன் என்ற மகனும் உள்ளார்கள். இந்த நிலையில் முதல் முறையாக சிவகார்த்திகேயனின் மகனின் புகைப்படம் வெளியாகியிருக்கின்றது.