தனது கள்ளக்காதலை கண்டுபிடித்த நாத்தனாரை கொலை செய்து விட்டு நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் அம்ரிட்சரை சேர்ந்தவர் ராஜ்விந்தர் கவுர். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவரது இளைய சகோதரி நேற்று முன்தினம் தனது அண்ணியை காண அண்ணன் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் ஹர்விந்தர் வீட்டுக்கு திரும்பாததால் அவரது கணவர் பல்விந்தர் சந்தேகம் கொண்டு ராஜ்விந்தரின் வீட்டிற்கு நேரடியாக சென்று பார்த்தார். அங்கு அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் ஹர்விந்தர் சடலமாகவும் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். இதனால் பல்விந்தர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ராஜ்விந்தரிடம் கேட்டபோது அவர் தற்கொலை செய்துவிட்டதாக கூறினார். அதன் பிறகு வயிற்றில் இருந்த காயத்தை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மீண்டும் ராஜ்விந்தரிடம் விசாரித்ததில் தனது காதலனான மந்தீப் உடன் சேர்ந்து ஹர்விந்தரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், தனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் அவருக்கு மந்தீப்புடன் பழக்கம் ஏற்பட்டதால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல திட்டம் போட்டனர். ஆனால் இதை அறிந்த நாத்தனார் ஹர்விந்தர் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தடுத்து நிறுத்தினார். இதனால் கோபமடைந்த அவர் தனது நாத்தனாரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.