பெண் ஒருவர் தனது கணவரின் தகாத உறவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் கௌசல்யா(19) – பாக்யராஜ்(32). இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பாக்யராஜ் வெளியில் சென்றிருந்த போது கௌசல்யா தூக்கில் தொங்கி பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவரின் கை மற்றும் கால்களில் ரத்த காயங்கள் இருந்துள்ளன. வீட்டின் சுவர்களிலும் ரத்தக் கறைகள் படிந்துள்ளன. இதனால் கௌசல்யாவின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அவருடைய உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் ஒன்றரை மாதமாக விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இதையடுத்து இறுதியாக, பாக்யராஜ் மற்றும் அவருடைய அண்ணி ஜோதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “பாக்கியராஜின் அண்ணன் குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் அவருடைய மனைவி ஜோதி தன்னுடைய குழந்தைகளுடன் கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பாக்யராஜுக்கும் திருமணம் முடிந்ததால் அவரும் அதே வீட்டில் புது குடித்தனம் நடத்தியுள்ளார். இதையடுத்து ஒருநாள் கௌசல்யா அவருடைய கணவரும், கணவரின் அண்ணி ஜோதி ஆகிய இருவரும் தவறாக இருந்ததை பார்த்துள்ளார். இதனால் பாக்யராஜ் மற்றும் கௌசல்யா இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் தனது அண்ணிக்கும், தனக்கும் ஏற்கனவே தகாத உறவு இருப்பதால் அதை கைவிட முடியாது என்று பாக்யராஜ் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த கௌசல்யா கைகளில் கத்தியால் வெட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்படியும் உயிர் போகாத நிலையில் தூக்கிட்டுள்ளார்” என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளனர். இதையடுத்து கௌசல்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக பாக்யராஜ் மற்றும் ஜோதி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.