போலியான பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பகுதியில் பன்னாட்டு விமான நிலையம் ஒன்று உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து துபாய் செல்வதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் நின்று உள்ளனர். குடியுரிமை அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் ஆவணங்களை சோதனை செய்துள்ளனர். அப்போது திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் ஆவணத்தை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
அப்போது அவர் வைத்திருந்த பாஸ்போர்ட் மற்றும் மற்ற ஆவணங்கள் சரியாக இல்லாததால் குடியுரிமை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் வங்கதேசத்தைச் சேர்ந்த ரிஸ்வான்கான் என்பதும், இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்ததும், போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி துபாய் செல்ல முயன்றார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன்பின் ரிஷ்வான்கானை கைது செய்து குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.