Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வெளிநாடு சென்று திரும்பிய 2,200 பேர் தனிமை – ஆட்சியர் சந்தீப் நந்தூரி

வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய 2,200 பேர் தூத்துக்குடியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு  நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ரேஷன் பொருட்கள் 15 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்க 1500 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை தங்க வைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |