நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
அதன்படி கொரோனா தொற்று இல்லை என்றாலும், 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். RT-PCR சோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். RT-PCR பரிசோதனை 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.