நாடு முழுதும் ஒமைக்ரான் வேகம் எடுத்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் முப்பத்தி நான்கு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது. இதனையடுத்து தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மட்டுமே 100% ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது.
நாளை முதல் தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துகிறது. அதன்படி ஒமைக்ரான் குறைவாக உள்ள நாடுகள் மற்றும் அனைத்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் தங்களுடைய வீடுகளில் ஏழு நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 8 நாட்களுக்கு பின் மீண்டும் பரிசோதனை செய்யப்படும். அப்போது தொற்று இல்லை என்பது உறுதியானால் தான் வெளியே நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.