Categories
அரசியல் மாநில செய்திகள்

“வெற்றி நடை போடும் தமிழகம்”… அரசின் திட்ட செலவு அல்ல… விளம்பர செலவு ரூ.64 கோடி…!!!

தமிழக அரசு சாதனைகளை விளக்க வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் வெளியிடும் விளம்பரங்களுக்கு 64 கோடி செலவழித்துள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதான் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து தருவதாக கட்சி தலைவர்கள் வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாகவே மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு தற்போது பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்களில் சாதனைகளை விளக்கி “வெற்றி நடை போடும் தமிழகம்”என்ற தலைப்பில் வெளியிடும் விளம்பரங்களுக்கான செலவு இதுவரை ஜிஎஸ்டி உடன் சேர்த்து ரூ.64.72 கோடி என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த விளம்பரங்கள் ஆளும் கட்சிக்கு சார்பாக இருப்பதால் தடை செய்யக்கோரி திமுக சார்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் இந்த தகவல் வெளியானது.

Categories

Tech |