Categories
அரசியல்

வெற்றி உறுதியானால்…. ஒரு டோக்கனுக்கு 20 ஆயிரமாம்…. அடிச்சது ஜாக்பாட்…!!!

கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு விலை உயர்ந்த டோக்கன்கள் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் உள்ளன. அம்மாவட்டத்தில் மொத்தம் 802 பகுதிகளுக்கு 3 ஆயிரத்து 366 பேர் போட்டியிடுகின்றனர். அதில் அதிமுக-பாஜக தனித்து போட்டியிட்டாலும் திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்தி தேர்தல் களத்தை சந்திக்கின்றனர். மேலும் கோவை மாவட்டத்தில் மொத்தம் 23 லட்சத்து 88 ஆயிரத்து 263 பேர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். அங்கு 2303 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 424 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு விலை உயர்ந்த டோக்கன்கள் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கோவையில் வாக்காளர்களுக்கு ஹாட் பக்குசுகள், சட்டைகள், கொலுசுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குறிப்பிட்ட டோக்கன்கள் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு வெற்றி பெறும் வேட்ப்பாளர்கள் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை மதிப்பிலான பொருட்களை வழங்குவதாக உறுதி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |