Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் 5 நிமிடமோ…. 10 நிமிடமோ போதும்… போலீஸ் மீது பாய்ந்த திருமா …!!

செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி என்ற இடத்தில் பேருந்து நிறுத்தத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் உடைய படத்தை வைத்து மலர் மாலை செலுத்துவதற்கு, அஞ்சலி செலுத்துவதற்கு விடுதலை சிறுத்தைகள் முயன்றார்கள். காவல்துறையினர் ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ  அனுமதி வழங்கி இருந்தால் இந்த பிரச்சனை பெரிதாக உருவெடுத்திருக்காது.

பல இடங்களில் சாதிப் பிரச்சினைகள் எழுவதற்கு காவல்துறையின் அணுகுமுறைகளே காரணமாக உள்ளன.சேலம் ஓகுரில் அப்படித்தான் நடந்தது, அங்கே வேறு எந்த சமூகத்தைச் சார்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ஆனால் உங்கள் கொடி ஏற்றப்பட்டால் இங்கே தேவையில்லாத பிரச்சனை வரும் என்று கற்பனையாக, யூகமாக காவல்துறையினரே ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.

அதனால்தான் அங்கே வன்முறை நடப்பதற்கான சூழல் எழுந்தது. இப்போது பட்டவர்த்தியிலும் காவல்துறையினரின் அணுகுமுறையால் தான் பிரச்சினையாக மாறி இருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஒரு சாதி சங்க தலைவர் அல்ல, உலகமே போற்றக்கூடிய உலகளாவிய தலைவர்களின் வரிசையில் இடம் பெற்றிருக்கின்ற ஒரு மாமனிதர். அவர் இந்திய அளவிலான தலைவர் என்கின்ற எல்லையை கடந்து உலக அளவில் போற்றப்பட கூடிய தலைவர்களின் வரிசையில் இடம் பெற்றிருக்கக் கூடிய ஒரு தலைவர்.

அனைத்து தரப்பு விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தவர். ஓபிசி மக்களுக்கென இட ஒதுக்கீடு வேண்டும், அவர்களின் நலன்களை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ஜவஹர்லல் நேரு அவர்களோடு வாதம் புரிந்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அப்படிப்பட்ட தலைவரை அவமதிக்கும் வகையில், பட்டவர்த்தியில் சிலரின் தூண்டுதலால் அப்பாவி மக்கள் மீது கல் எரிந்து இருக்கிறார்கள், அந்த மக்களுக்கு எதுவும் தெரியாது, அவர்களை தூண்டி விட்டவர்கள் பின்னாலிருந்து அம்பேத்கர் படத்தை அவமதித்து இருக்கிறார்கள், இது விடுதலை சிறுத்தைகளுக்கான அவமதிப்பு அல்ல, அம்பேத்கர் படத்தை அவமதிக்க கூடிய வகையில் நடந்து கொண்டார்கள். அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |