Categories
தேசிய செய்திகள்

‘வெறும் 4 நாட்களுக்கு மட்டும்தான் இருக்குமாம்’… மின்சார ஆணையத்தின் தகவலால் மீண்டும் அதிர்ச்சி….!!!

இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி 4 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே நிலக்கரித் தட்டுப்பாடு என்பது ஒரு பேசப்படும் பொருளாகவே இருந்து வருகிறது. இதனால் மின்சார உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டு பல மாநிலங்கள் இருளில் தத்தளித்து வருகின்றனர். இது தொடர்பாக பலர் வதந்திகளை பரப்பி வருவதாகவும் அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இருப்பினும் நிலக்கரி தட்டுப்பாடு என்பது கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. அந்தவகையில் நாட்டில் 50க்கும் மேற்பட்ட அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் சூப்பர் கிரிட்டிக்கல் ஸ்டாக் எனப்படும் நிலக்கரி கையிருப்பு கொண்ட அனல் மின் நிலையங்களின் எண்ணிக்கை கடந்த 13ம் தேதி 64 ஆகவும் 19ஆம் தேதி 61 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. நிலக்கரி கையிருப்பு இல்லாத அனல் மின் நிலையங்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை 21ஆக இருந்த நிலையில் நேற்று 18 குறைந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒரு நாளுக்கு மட்டுமே நிலக்கரி கொண்டு உள்ள அனல் மின் நிலையங்களின் எண்ணிக்கை 27 இல் இருந்து 21 ஆகவும், இரண்டு நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு கொண்டுள்ள அனல் மின் நிலையங்களின் எண்ணிக்கை 20 லிருந்து 18 ஆக குறைந்திருக்கிறது. நாட்டில் மொத்தம் 135 அனல் மின்நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு மின்சார ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இந்த அனல் மின்நிலையங்கள் மூலம் 165 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே மின்தட்டுப்பாடு அளவும் சற்றே குறைந்திருக்கிறது என்பது ஒரு நிம்மதியான செய்தியாகும். அந்தவகையில் 13-ஆம் தேதி நிலவரப்படி 5620 ஒரு மெகாவாட் மின்சார தட்டுப்பாடு இருந்த நிலையில் இது தற்போது 4454 ஆக குறைந்திருக்கிறது. இது குறித்து நிபுணர்கள் கூறுகையில் நாடு முழுவதும் தற்போது குளிர்காலம் தொடங்கி இருப்பதால் மின் தேவையும் சற்றே குறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டால் நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு நீங்கும் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

Categories

Tech |