கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் அனைவரும் நிதி நெருக்கடியில் உள்ளனர். அவர்களுக்கு சில நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி பல்சர் பைக் வாங்குவது சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. செகனண்ட் பஜாஜ் பல்சர் பைக் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பஜாஜ் பல்சர் 180 பைக்கை நீங்கள் வெறும் 35,000 ரூபாய்க்கு வாங்கலாம். இதன் அசல் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும். இந்த சலுகை CredR வெப்சைட்டில் கிடைக்கிறது. இந்த பைக் இதுவரையில் 28,897 கிலோமீட்டர் ஓடியுள்ளது.
இந்த பைக்கிற்கு முதலில் 38 ஆயிரம் விலை நிர்ணயிக்கப்பட்டு அதன்பிறகு 35 ஆயிரம் என குறைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் நீங்கள் வாங்கும் போது ஆறுமாத வாரண்டி வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஏழு நாட்கள் பாதுகாப்பு சலுகை கிடைக்கும். இதற்கு முன் பணமாக 399 ரூபாய் செலுத்தி இந்த பைக்கை வாங்கி செல்லலாம். அதன்பிறகு தவணை முறையில் எஞ்சிய பணத்தை செலுத்தலாம். இதுபோன்ற பைக்குகள் அல்லது கார்களை வாங்கும்போது நீங்கள் இவற்றின் ஷோரூம் விலை, இதர அம்சங்கள், சிறப்பு சலுகைகள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் நல்லது.