உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆயிரம் ரூபாய் கொடுக்காததால் கர்ப்பிணி பெண்ணை அரசு ஆம்புலன்ஸ் நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், ஹமீர்பூர் மாவட்டம், பந்தாரி என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதை எடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வர வைத்துள்ளனர். அவர்களும் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தபோது ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் நடுரோட்டில் இறக்கி விட்டனர்.
இது தொடர்பாக வந்த பெண்ணின் உறவினர் ஒருவர் தெரிவித்ததாவது “1000 ரூபாய் பணம் கொடுத்து இருந்தால் கர்ப்பிணி பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் மருத்துவமனையில் இறக்கி விட்டிருப்பார். பணம் கொடுக்க முடியாததால் நடுரோட்டில் இறக்கி விட்டார்” என்று கூறினார். வழியில் துடிதுடித்த அந்தப் பெண் சாலை ஓரம் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.