நீங்கள் அதிகளவு லாபம் கிடைக்கும் இடத்தில் முதலீடு செய்ய விருப்பப்பட்டால், போஸ்ட் ஆபீஸ் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் போஸ்ட் ஆபிஸில் கணக்கு தொடங்கினால் லட்சங்களை திரும்பபெறலாம். தபால் அலுவலகத்தின் சிறு சேமிப்பு திட்டத்தில் மிகச் சிறிய தொகையை டெபாசிட் செய்து முதலீடு செய்யலாம். இது தவிர்த்து ரெக்கரிங் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.100ல் இருந்து முதலீடு செய்யலாம். அதேபோன்று உங்களது வசதிக்கேற்ப 1 ஆண்டு , 2 ஆண்டுகள் (அ) அதற்கும் மேலாக ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
அத்துடன் இத்திட்டத்தில் 3 மாதங்களுக்கு ஒரு முறை தபால் துறை வாயிலாக வட்டியும் வழங்கப்படுகிறது. தபால் அலுவலகத்தின் இத்திட்டத்தில் 18 வயது (அ) அதற்கு மேற்பட்ட எவரும் தங்களின் கணக்கைத் துவங்கலாம். அதேபோன்று தாய் (அ) தந்தை மைனர் குழந்தையின் கணக்கைத் திறக்கலாம். அத்துடன் இவற்றில் மற்றொரு சிறப்பு என்னவெனில் நீங்கள் லோன் வசதியையும் பெற இயலும். அந்த அடிப்படையில் நீங்கள் லோன், கடன் வாங்க விரும்பினால் உங்களது தபால் அலுவலகக் கிளையை தொடர்புகொள்ளவும். இக்கடனை 12 தவணைகளில் டெபாசிட் செய்யலாம். நீங்கள் டெபாசிட் செய்யும் தொகையில் 50 சதவீத கடன், லோன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் மாதந்தோறும் ரூபாய்.6,000 அதாவது நாளொன்றுக்கு ரூபாய்.200 டெபாசிட் செய்தால், 7.5 வருடங்களுக்கு பின் ரூ.6 லட்சத்து 76 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகையை நீங்கள் பெறுவீர்கள். மாதந்தோறும் ரூ.6,000 டெபாசிட் செய்தால், ஒரு ஆண்டில் ரூ.72,000 டெபாசிட் செய்வீர்கள். இதேபோன்று நீங்கள் 90 மாதங்கள் (அ) 7.5 வருடங்கள் முதலீடு செய்ய வேண்டும். இதன் வாயிலாக 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை முதலீடாக வைப்பீர்கள். அதன்பிறகு திட்டத்தின் மெச்சூரிட்டியின்போது, நீங்கள் 1,36,995 ரூபாய் திரும்பப் பெறுவீர்கள். இவ்வழியில் நீங்கள் 90 மாதங்களுக்குப் பின் மொத்தம் ரூ.6,76,995 பெறுவீர்கள். இதன் வாயிலாக ரெக்கரிங் டெபாசிட்டில் முதலீடு செய்து லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம்.