Categories
அரசியல்

“வெறுப்பு அரசியலை போக்க இது ஒரு நல்ல வாய்ப்பு”…. இவர் யார சொல்லுறாரு….? ராகுல் காந்தி அதிரடி….!!!

நடைபெற உள்ள பல்வேறு மாநில தேர்தல் குறித்து ராகுல் காந்தி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் கமிஷனர் அறிவித்துள்ளார். பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதி வரை 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராகுல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது ,2022ம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டசபைத் தேர்தல் வெறுப்பு அரசியலை போக்கும் ஓர் அரிய வாய்ப்பு என்று அவர் ஹிந்தியில் பதிவிட்டுள்ளார். உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.,வை வீழ்த்துவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |