நடிகர் எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் குஷி, வாலி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இதை தொடர்ந்து இவர் நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் . மேலும் இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். தற்போது இவர் பொம்மை, டான், மாநாடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரை விஜய் ஆண்டனியின் கொலைகாரன் படத்தை இயக்கிய ஆண்ட்ரு லூயிஸ் இயக்க இருக்கிறார் . தற்போது இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.