வெப்ப காற்று பலூன் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.
அமெரிக்க நாட்டில் வருடந்தோறும் வெப்ப காற்று பலூன் திருவிழா கோலாகலமாக நடைபெறுவைத்து வழக்கம். அதேபோல் இந்த வருடமும் இத்திருவிழா வெகு விமர்சையாக தொடங்கி உள்ளது. அல்புகெர்கி நகரில் பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த வெப்ப காற்று பலூன் திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெறும். 1972 ஆம் ஆண்டு முதல் முதலில் இந்த திருவிழா நடத்தப்பட்டது. அப்போது 13 பலூன் மட்டுமே பறக்க விடப்பட்டுள்ளன. ஆனால் தற்போது 600 முதல் 700 வெப்ப காற்று பலூன்கள் ஒவ்வொரு ஆண்டும் பறக்க விடப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது தொடங்கிய 50ஆவது வெப்ப காற்று பலூன் திருவிழா அந்நகர வானை வண்ண வண்ண பலூன்களால் அலங்கரித்துள்ளன.