Categories
தேசிய செய்திகள்

வெந்நீர் ஊற்றி மாணவர்களின் எதிர்காலத்தை அழித்து விடாதீர்கள்…. பாமக நிறுவனர் ராமதாஸ் சரமாரி கேள்வி….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. அதன் பின்னர் சில நாட்களிலேயே 11-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. இந்நிலையில் தொழில் கல்வி பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லை என்றால் அப்போதே தெரிந்து இருக்கும். அவ்வாறு தெரிந்திருந்தால் மாணவர்கள் சேர்க்கையை  நிறுத்திருக்கலாம்.

ஆனால் மாணவர்கள் சேர்க்கை முடிந்து வகுப்புகளும் தொடங்கப்பட்ட இந்த நேரத்தில் ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் நிறுத்தப்படுகிறது என்றால் அதற்கு காரணம் ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லை. வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. நமது தமிழக அரசு மாணவர்களின் திறன் மேம்படுவதற்காக தான் “நான் முதல்வன்” போன்ற திட்டங்களை செயல்படுத்தி அதனை  பெருமித்ததுடன் விளம்பரம் செய்து கொள்கிறது.

மேலும் மாணவர்களை வேலை வாய்ப்புக்கு தகுதியானவர்களாக மாற்றுவதற்காக தான் வேளாண் அறிவியல், செவிலியர் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கு சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்படுகிறது. ஆனால் தொழில் கல்வி பாடப்பிரிவுகளை நிறுத்துவது முரண்பாடுகளின் உச்சம். மேலும் மேல்நிலைக்கல்வி முடித்து பொறியியல், வேளாண் அறிவியல், செவிலியர் போன்ற படிப்புகளில் சேரவும், வேலைவாய்ப்பு  பெறவும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கான ஒரே வழி தொழில் கல்வி பாடப்பிரிவுகள் தான். இவற்றை மூடி ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை வெந்நீர் ஊற்றி அளிக்கக்கூடாது. எனவே தமிழக அரசு ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால் புதிய ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |