புதுச்சத்திரம் அருகே வெந்நீர் வைப்பதற்காக அடுப்பு பற்ற வைத்த கல்லூரி மாணவி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சத்திரம் அருகே தத்தா திரிபுரம் என்ற பகுதியில் சரவணன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 17 வயதில் திவ்யா என்ற மகள் இருக்கிறார். அவர் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி திவ்யாவின் பெற்றோர் கோவிலுக்குச் சென்று இருந்தனர். அப்போது திவ்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அச்சமயத்தில் வெந்நீர் வைக்க விறகு அடுப்பு பற்ற வைத்துள்ளார்.
அப்போது சரியாக அடுத்து எரியாததால் கேனில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தீயில் ஊற்றி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திவ்யாவின் உடல் மீது தீ பற்றியதால், அவர் துடிதுடித்து கதறினார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.