Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெட்டப்பட்ட மரங்கள்…. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…. பொதுமக்கள் சாலை மறியல்….!!

மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கிராமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள காளிசெட்டிபட்டிபுதூர் கிராமத்தில் உள்ள காவல்காரன் குட்டை ஒன்று உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் இருந்த மரங்களை சிலர் வெட்டியதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே காவல்காரன் குட்டை சம்பந்தமான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் தீர்ப்பு வரும் வரை குட்டை உள்ள பகுதிகளுக்கு செல்ல கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த சேந்தமங்கலம் தாசில்தார் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் குணாளன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |