மனித உடலின் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்த விவகாரத்தில் 59 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற மாகாணத்தில் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக சடலங்களை வழங்கிவரும் தொழில் செய்பவர் Walter Mirchel (59). இந்நபர் தற்போது 5 வெட்டப்பட்ட மனித தலைகள் மற்றும் 24 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ள விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அரிசோனா மாகாணத்தில் உள்ள காட்டுப்பகுதிகளில் சுமார் நான்கு நாட்களுக்கு முன்பு இரண்டு வெவ்வேறு பகுதிகளில் மனித உடலின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் இந்த உடல் பாகங்கள் சியாட்டில் என்ற பகுதியில் உள்ள Walter Mirchelன் நிறுவனத்திற்குரியவை என்று கண்டறிந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து Walter தன் நிறுவனத்தை சமீபத்தில் மூடி உள்ளதாக கூறியுள்ளார். எனினும் உடல் பாகங்களை காட்டிற்குள் கொண்டு சென்று வீசியதற்கான காரணம் விசாரணைக்கு பின்பு தெரிய வரும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும், அரிசோனாவில் பிரஸ்காட்டி என்ற நகருக்கு வெளியிலும் மனித உடலின் பாகங்கள் கிடப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 19 மனித உடலின் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாவது நாளும் மற்றொரு பகுதியில் வெட்டப்பட்ட மனித தலைகள் ஐந்து மற்றும் உடல் பாகங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேலும் இதனை கொலை சம்பவமாக கருதி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது அந்த உடல் பாகங்கள் Walter Mirchel என்பவரின் நிறுவனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து Walter கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது 28 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.