தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என நடிகர் சாந்தனு கோபமாக கூறியுள்ளார்.
எண்பதுகளில் மிகவும் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகராக விளங்கியவர் பாக்கியராஜ் . இவருடைய மகன் சாந்தனு இவர் சக்கரைகட்டி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடைசியாக அவரது நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படம் வெளியானது. தற்போது ராவண கோட்டம் என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார். எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சாந்தனு அடிக்கடி தனது மனைவியுடன் நடனமாடுவது, மற்றும் தான் நடித்த படங்கள் குறித்த அப்டேட்களை வெளியிடுவது போன்று ஏதாவது செய்து கொண்டிருப்பார்.
இந்நிலையில் தனது சொத்து மதிப்பு 15 கோடி என வெளிவந்த செய்தியைப் பார்த்து கடுப்பாகி உள்ள சாந்தனும் இதுகுறித்து தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது, “ஜர்னலிசமுக்கு மரியாதை கொடுங்கப்பா… நூல் அளவு கூட உண்மை தெரியாம வெட்கமே இல்லாம நியூஸ அடிச்சு விடுறீங்க… அவன் அவன் வாழ்க்கையில எவ்ளோ பிரச்சனைய ஃபேஸ் பண்றான். நீங்க என்னடான்னா… பொய்யான நியூஸ போட்டு, நீங்கதான் எக்கசக்கமா சம்பாதிச்சு வச்சுருப்பீங்க… என கழுவி கோபமாக கூறியுள்ளார்.