Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய….. ”2750 டன் அமோனியம் நைட்ரேட்” பரபரப்பு தகவல் …!!

லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் இருக்கும் துறைமுகத்தில் நேற்று பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து பெய்ரூட் நகரையே உலுக்கியது. 15 கிலோமீட்டர் தொலைவிற்கு இதன் அதிர்வலையை உணர்ந்ததாக மக்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த துயர விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் சேதமாகின. கண்ணாடிகள் அதிர்வால் நொறுங்கியது. அருகிலிருந்த கார்கள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டன.

Image

இதனால் பெய்ரூட் நகருக்கு இரண்டு நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல கிலோ மீட்டருக்கு நடந்த சேதாரங்களை கணக்கிடும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வெடி விபத்து நடைபெற்ற கட்டிடத்திற்கு அருகே மூன்று மணி நேரத்திற்கு முன்பாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைத்துக் கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் இந்த விபத்தால் காணாமல் போயுள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. விபத்து தொடர்பாக அந்நாட்டு அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

https://twitter.com/Martial_15/status/1290737182345441287

இந்த விசாரணையின் முதல் கட்ட விசாரணையில் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது என நாட்டின் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார். எந்த ஒரு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் மக்கள் உயிருக்கு ஆபத்தை கொடுக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் கடந்த 6 ஆண்டுகளாக துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. சுமார் 2750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் வைக்கப்பட்டுள்ளதால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இந்த கொடூர விபத்துக்கு காரணமாணவர்கள் மீது உச்சபட்ச தண்டனை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை என்று  நாட்டு பிரதமர்  ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |