ஐதராபாத் காவல்துறையினருக்கு நேற்று வெடி குண்டு மிரட்டல் விடுத்து ஒரு அழைப்பு வந்ததை அடுத்து, அவர்கள் உடனே சோதனையில் இறங்கினர். இதையடுத்து ஐஎஸ் சதன் சாலையிலுள்ள கோவில்கள் மற்றும் மசூதிகள் உள்பட பல பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த மிரட்டல் அழைப்பு காரணமாக அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
இதற்கிடையில் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அத்துடன் வெடி குண்டு தடுப்புபிரிவினரும் வரவழைக்கப்பட்டனர். அதன்பின் அந்த அழைப்பு புரளி என்பது தெரியவந்தது. அப்பகுதி முழுவதையும் சுற்றிவளைத்த காவல்துறையினர், மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்து கைது செய்தனர். தற்போது கைதான நபர் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.