பெரம்பலூர் அருகே விவசாயம் ஒருவரது வயலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 400 கிலோ சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர் .
செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ சின்ன வெங்காயத்தை தனது வயலில் பட்டறையம் வைத்திருந்தார் , விற்பனைக்கு எடுத்துச் செல்லும் முன் காய்கள் கெட்டு போகாமல் இருப்பதற்காக இவ்வாறு பாதுகாப்பது வழக்கம். நேற்று மாலைவழக்கம் போல் வயலுக்கு சென்று பார்த்தபோது பாதுகாப்பதற்காக வைத்திருந்த வெங்காய பட்டறையத்தை பார்த்தபோது அங்கிருந்த வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.இதனால் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் திருடர்களை போலீசார் தேடி வருகின்றன.முன்பு வீடு வீடாக தங்கத்தை திருடியவர்கள் ,இன்று வெங்காயத்தை திருடும் நிலைக்கு வந்துள்ளனர் .