Categories
சினிமா தமிழ் சினிமா

வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாகும் சினேகா… வெளியான புதிய தகவல்…!!!

ஷாட் பூட் 3 என்ற படத்தில் வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக சினேகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் அருண் வைத்யநாதன் . மேலும் இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான கல்யாண சமையல் சாதம் என்ற படத்தை தயாரித்திருந்தார். தற்போது தனது பெயரை அருணாச்சலம் வைத்யநாதன் என மாற்றியுள்ள இவர் ஷாட் பூட் 3 என்ற படத்தை இயக்கவுள்ளார். குழந்தைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் பிரபல வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார் .

அருணாச்சலம் வைத்யநாதன், ஷாட் பூட் 3 படத்தின் போஸ்டர்

இந்நிலையில் ஷாட் பூட் 3 படத்தில் வெங்கட் பிரபு, சினேகா இருவரும் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோவா படத்தில் சினேகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர்கள் இருவரும் இந்த படத்தில் முதல் முறையாக ஜோடியாக நடிக்க இருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |