வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் சிம்புவின் மாநாடு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதைதொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டைமெண்ட் மற்றும் பிளாக் டிக்கெட் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘மாநாடு’ படத்தின் பணிகள் நிறைவடைந்த பின் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.