Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் நடத்தப்படும்”- சிஎஸ்கே

சிஎஸ்கே வீரர்கள் சென்னைக்கு வருவதற்கு முன் தோனி உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சிஎஸ்கே அணி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல்  காரணமாக வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த டி20 உலகக்கோப்பை தள்ளிவைக்கப்பட்டதால், இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க சென்னை, மும்பை உள்ளிட்ட அனைத்து அணிகளும் ஆகஸ்ட் 20ம் தேதி இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் சென்னை அணி முதலில் சென்னைக்கு வந்தபிறகு, மத்திய அரசின் அனுமதி பெற்று அதன் பின் மற்ற அணிகளுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகம் செல்லவுள்ளதாக, தகவல் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில், சிஎஸ்கே வீரர்கள் சென்னைக்கு கூடுவதற்கு முன்பு தோனி உட்பட அனைத்து வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சிஎஸ்கே அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி சிஎஸ்கே தரப்பில் கூறியிருப்பதாவது, “சென்னையிலிருந்து தான் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வோம். சென்னையில் கூடுவதற்கு முன்னதாக தோனி உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட அடுத்த 48 மணி நேரத்தில் விமானத்தில் பயணம் மேற்கொள்வர். இது தொடர்பான அரசாங்கத்தின் அனுமதிக்காகக நாங்கள் காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன், நாங்கள் விசா பெறுவதற்கான செயல்முறையைத் தொடங்குவோம். உயர்ந்து கடைப்பிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டப் பிறகு பயிற்சி முகாம் குறித்த முக்கிய முடிவுகளை நாங்கள் எடுப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |